தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
லியோ படத்தை தொடர்ந்து ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருக்கும் தகவல் தற்போது அமெரிக்கா வரை சென்று இருக்கிறது இதை ஒரு பிரபலம் பேட்டியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதாவது நடிகர் நெப்போலியன் அவர்கள் பேட்டி அளிக்கும் போது விஜய் உடன் நீங்கள் இணைந்து படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த நெப்போலியன் நானும் விஜயும் போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருப்போம்.
ஆனால் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கும் விஜய்க்கும் சிறு மனசபு ஏற்பட்டிருக்கிறது அதுமட்டுமல்லாமல் விஜய் தன்னை கேவலமாக பேசியதாக ஏற்கனே நெப்போலியன் அவர்கள் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நானும் விஜய்யும் இதுவரைக்கும் பேசிக் கொண்டதில்லை என்று நெப்போலியன் அவர்கள் கூறியிருக்கிறார். அதன் பிறகு நீங்கள் இருவரும் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டு இருக்கிறது. உடனே நான் அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டேன். நான் நடிக்க தயார் ஆனால் விஜய் இதற்கு ஒப்புக் கொள்வாரா என்று கேட்டிருக்கிறார்.
ஏனென்றால் விஜய் தற்போது அம்மா அப்பாவிடம் பேசாமல் இருக்கும் செய்தி அமெரிக்கா வரை பரவிக் கிடைக்கிறது முதலில் தன்னுடைய அம்மா அப்பாவிடம் போய் சமரசம் பேச சொல்லுங்க என்று கூறியிருக்கிறார் நெப்போலியன்.