நடிகர் விஜயின் சினிமா மார்க்கெட் முடிய போகுது.. முக்கிய பிரபலம் சொன்ன திடுக்கிடும் தகவல்

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிக்கும் தளபதி விஜய் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு ஏற்றார் போல தனது சம்பளத்தை அதிகமாகி வருகிறார் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதன்மையானவராக விஜய் இருக்கிறார் இவர் தற்பொழுது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க சர்வதேச போதை பொருளை மையமாக வைத்து படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் action, செண்டிமெண்ட் போன்றவை பெரிய அளவில் இருக்கும் என தெரியவருகிறது. லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த் போன்றவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் விஜயின் சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் விஜயின் மார்க்கெட்டும் பெரிய அளவில் விரிவடையும் என கூறப்படுகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அரசியல் பிரமுகரான ஏ எல் சூர்யா நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாகி உள்ளது அவர் சொன்னது..

இவர் எதிர்காலத்தை கணிக்க கூடியவர் என பல பெட்டிகளில் கூறியுள்ளார் அதன்படி நடிகர் விஜயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த ஏ எல் சூர்யா எதிர் காலத்தில் நடிகர் விஜய்க்கு சுத்தமாக மார்க்கெட்டை இல்லாமல் போகும், அவருக்கு சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் போகும்..

அதேசமயம்  நடிகை திரிஷாவிற்கு வளமான எதிர்காலம் உள்ளது. சினிமாவையும் தாண்டி அவர் அரசியலில் பல சாதனைகளை படைப்பார் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்து  காட்டுதீ போல பரவி வருகிறது.