yuotube – ல் புதிய சாதனை படத்தை விஜயின் மாஸ்டர்- என்ன தெரியுமா.?

master

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இப்போது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் எடுத்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பையும் விறுவிறுப்பாக எடுத்து வருகிறார்.

தற்போது படக்குழு கேரளாவில் தனது சூட்டிங்கை தொடங்கியுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது இது இப்படியிருக்க தளபதி விஜய் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியிருக்கிறார் இந்த நிலையில் தளபதி விஜய்யின் பாடல் ஒன்றும் புதிய சாதனை படைத்து அசத்தி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் விஜய் இணைந்து தனது 64வது திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும் வசூல் ரீதியாகவும் 200 கோடி அள்ளியதாக தகவல்.

மாஸ்டர் படம் வெளிவருவதற்கு முன்பாகவே வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடலில் இன்னமும் நல்ல வரவேற்பு பெற்று யூடியூபில் டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் வாத்தி கம்மிங் பாடல் 2.8 மில்லியன் லைக்குகளை பெற்று அசத்தி உள்ளது.

இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் இணையதள பக்கத்தில் பகிர்வதோடு மட்டுமல்லாமல் பெற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.