விஜயின் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடி இருக்கும் என கூறிய விநியோகஸ்தர்.!

master-vijay
master-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவை பொருத்தவரை வசூல் மன்னனாக நீடித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பது நாம் அறிந்ததே. விஜய் தான் பெரிய வசூல் மன்னன் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளதை நாம் கண்டுள்ளோம்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிகில். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது படம் சுமார் 300 கோடியை வசூல் செய்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த ப்பட்டியலில் இந்தப் படமும் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து நடித்துள்ள படம் மாஸ்டர் இப்படம் சமீபத்தில் வெளிவர இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வணிக வளாகங்கள், கல்லூரி, பள்ளி, திரையரங்குகள் என அனைத்தையும் மூடி உள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் ஒருவர். மாஸ்டர் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் மட்டும் சுமார் 40 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.