தளபதி விஜயிடம் பல ஆண்டுகள் மேனேஜராக பணியாற்றி வந்த ஜெயதீஷ் தற்பொழுது தயாரிப்பாளராக மாறி உள்ளார் தற்பொழுது அவர் தயாரித்துள்ள முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் இணை இருக்கிறார்.
இந்நிலையில் தளபதி விஜய்யிடம் பல ஆண்டுகள் மேனேஜராக பணியாற்றி வந்தவர்தான் ஜெகதீஷ். இவர் தற்பொழுது தயாரிப்பாளராக மாறி உள்ளார் அதாவது பிரபல தயாரிப்பு நிறுவனமான பேசன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படம் மலையாளத்தில் உருவாகி வரும் நிலையில் Sesham Mikeil Fathima என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அந்த போஸ்டரை தற்பொழுது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் அவர் இந்த படத்தில் நான் நடிப்பது மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். திரைப்படத்தின் மனு சி குமார் இயக்கத்தில் அப்துல் வஹ்ஹாப் என்பவரின் இசையமைப்பில் உருவாகி வருகிறது. இவ்வாறு விஜய் இடம் தொடர்ந்து மேனேஜராக பணியாற்றி வந்த ஜெகதீஷ் தயாரிப்பாளராக மாறி உள்ள நிலைகள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.