ஹாலிவுட் தரத்தில் உருவாகும் விஜயின் “லியோ”.. சொன்னா நம்ப மாட்டீங்க வீடியோவை வெளியிட்டு மாஸ் பண்ணிய படக்குழு

lio vijay
lio vijay

தளபதி விஜய் தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்று அந்தஸ்தை பெற்றிருக்கும் லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது அதனால் அடுத்த இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து முன்னணி நடிகர், நடிகைகளான த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின் மற்றும் இளம் நடிகை பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி என பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து லீயோ படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் தான் லியோ படத்தில் மிஸ்கின் காட்சிகள் நிறைவு பெற்றது அதற்கு அவரே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார் அதைத் தொடர்ந்து கௌதம் மேனன் காட்சிகளும் நிறைவு பெற்றுள்ளது என தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த படம் குறித்து தொடர்ந்து பல அப்டேட்டுகள் வெளி வந்த வண்ணமே இருக்கின்ற நிலையில் தற்போது லியோ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் லியோ படத்திற்கு என்ன கேமரா பயன்படுத்தப்படுகிறது என தெரியவந்துள்ளது. ஆம் ரெட் கேமராவை வைத்து தான் லியோ படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த கேமரா அதிகம் ஹாலிவுட் திரை உலகில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த கேமரா இதற்கு முன் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது அதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பீஸ்ட் மற்றும் லியோ இரு திரைப்படத்திற்கும் மனோஜ் பரம கம்சா தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அந்த கேமரா வீடியோ…