Leo Movie: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த ஏராளமான அப்டேட்டுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது சில நாடுகளிலும், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்களுடைய கூட்டணியில் மாசாக லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல கோடி பொருட்ச அளவில் லலித் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.
இதனை அடுத்து பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏராளமான பிரபலம் இணைந்து நடித்திருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் ஆக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வட அமெரிக்காவில் அதிகாலை 4 மணி மற்றும் 6.40 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதேபோல் பிரிட்டனில் அதிகாலையில் 5.10 காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் லியோ திரைப்படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் காட்சி முடிந்த பிறகு தான் தமிழகத்தில் முதல் காட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.