Leo Movie: தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது எனவே இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி இருக்கிறது. அப்படி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி தான்’ பாடல் வெளியானது. இந்த பாடத்தின் சில வரிகள் சர்ச்சை கிளப்பிய நிலையில் தற்போது சென்சார் போர் அந்த வரிகளை நீக்க அதிரடியாக உத்தரவு செய்துள்ளதாம்.
மாஸ்டர் படத்தின் வெற்றினை தொடர்ந்து லியோ படத்தில் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி இணைந்துள்ளது. எனவே மாஸ்டர் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அதைவிட லியோ படம் இன்னும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இதற்கிடையில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது. நான் ரெடி தான் என்று டைட்டிலுடன் வெளியான இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு.
நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி.@actorvijay@Dir_Lokesh @7screenstudio
எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை… pic.twitter.com/aJWnPw38u3
— ராஜேஸ்வரி பிரியா (@Rajeswaripriya3) September 9, 2023
சமீப காலங்களாக விஜய் தனது படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் ஆனால் நான் ரெடி தான் பாடலில் வாயில் சிகரெட் உடன் டான்ஸ் ஆடி இருந்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் அதேபோல் நான் ரெடி பாடலில் பத்தாவது பாட்டில் நான் குடிக்க.. அண்டாவ கொண்டா சேர்ஸ் அடிக்க.. பத்தவச்சு புகைய விட்டா பவரைக்குக்கு’ போன்ற சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே சில அரசியல் தலைவர்களும் நான் ரெடி தான் பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். எனவே இதனை அடுத்து அரசியல் பிரமுகர் மகேஸ்வரி பிரியா என்பவர் நான் ரெடி தான் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சை வரிகளை நீக்க வேண்டும் என சட்ட போராட்டம் நடத்தினார். அதற்கு தற்பொழுது நீதி கிடைத்துள்ளது அதாவது, நான் ரெடி பாடலில் உள்ள சர்ச்சைக்கான வரிகளை நீக்க மத்திய சென்சார் போட்டு உத்தரவு செய்துள்ளது. அதேபோல் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளும் இந்த பாடலில் நீக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் நிலையில் இது குறித்து ராஜேஸ்வரி பிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.