மெட்ரோ டிரெயினில் மாஸ் காட்டும் விஜயின் வாரிசு – ப்ரோமோஷன் வேலைகள் தீவிரம்..

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் பீஸ்ட் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க.. விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாக்கலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப் படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இவர்கள் இருவருடன் கைகோர்த்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா..

யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது இந்த படம் வெளி வருவதற்கு முன்பாகவே மக்கள் மற்றும் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாரிசு படக்குழு அடுத்த அடுத்த அப்டேட்களை கொடுத்து வருகிறது.

இதுவரை வாரிசு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் என போஸ்டர்கள் வெளிவந்தது அதனைத் தொடர்ந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே  முதல் சிங்கிள், அடுத்ததாக சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வெளிவந்து இணையதள பக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படக்குழு சத்தமே இல்லாமல் பிரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது முதலாவதாக வாரிசு படக்குழு மெட்ரோ ட்ரெயின்னில் வாரிசு படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி விளம்பரப்படுத்தி உள்ளது இதனை அதிகாரப்பூர்வமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது இதோ நீங்களே பாருங்கள் வாரிசு படத்தின் அந்த பிரமோஷன் செய்யும் வீடியோவை..