தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் படையப்பா.
இந்த படத்தில் இடம் பெற்று இருந்த ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் ரஜினியும் தன்னுடைய சூப்பரான ஸ்டைலினால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார். இந்தப் படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த நிலையில் ரஜினிக்கு நிகராக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார்.
எனவே இவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது மேலும் இந்த படத்தில் சௌந்தர்யா, செந்தில், ராதாரவி, லக்ஷ்மி, நாசர், மணிவண்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஒன்று போய்க்கொண்டிருக்கிறது.
அதாவது படையப்பா படத்தினை விட கில்லி திரைப்படம் அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்ததாக விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர். மேலும் இது குறித்த தகவலும் சோசியல் மீடியாவில் வைரலாக இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் இவர்களிடம் மோதத் தொடங்கினர். அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் அதெல்லாம் கிடையாது படையப்பா படத்தின் வசூலை கில்லி திரைப்படம் நெருங்க கூட இல்லை என கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த இரண்டு திரைப்படங்களின் வசூல் விவரம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது படையப்பா திரைப்படம் வெளியாகி ரூபாய் 64 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கில்லி திரைப்படம் வெளியாகி ரூபாய் 33 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் படையப்பா திரைப்படத்தினை விட கில்லி திரைப்படத்தின் வசூல் குறைவுதான் என தெரியவந்துள்ளது.