தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர்தான் சூர்யா இவர் சமீபத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் தளபதி விஜயின் நண்பன் சஞ்சீவ் ஒரு பேட்டி ஒன்றில் சூர்யாவைப் பற்றி பேசியுள்ளார் அதில் நான்,விஜய் மற்றும் சூரியா ஆகியோர் ஒரே கல்லூரியில் தான் படித்தோம் சினிமாவில் வந்தபோது சூர்யாவுக்கு திரைப்படத்தில் டான்ஸ் ஆட வராது ஆனா இன்னைக்கு வேற லெவலில் நடித்து வருகிறார் ஒன்றரை டன் வெயிட்டு பாக்குறியா என டயலாக் எல்லாம் பேசுகிறார்.
அதுமட்டுமல்லாமல் இன்னைக்கு சூர்யாவுக்கே ரொம்ப ஆச்சரியமாக இருக்கு அதற்கெல்லாம் முக்கிய காரணம் அவரது விடா முயற்சி மட்டும்தான் என்று கூறியது மட்டுமல்லாமல் அவர் இந்த அளவுக்கு டான்ஸ் ஆடுவது காரணம் என்றால் அது கிஷோர் மாஸ்டர் தான் காரணம் எனவும் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.