Vijay friend Sanjeev responded to Meera Mithun : சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுற்றி திரிபவர் மீரா மிதுன், இவர் பிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சையை உருவாக்கியவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது அப்பட்டமாக பழியை சுமத்தி அப்படி நான் கூறவே இல்லை என அந்தர் பல்டி அடித்தார். அந்த ஒரு சம்பவத்திலேயே மீரா மிதுன் மீது இருந்த நல்ல அபிப்பிராயம் அனைவரிடமும் உடைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஏதாவது சர்ச்சையை உருவாக்கி கொண்டே இருக்கிறார் மீரா மிதுன், இவர் பிரபலம் அடைவதற்காக தான் இவ்வாறு செய்கிறார் என பலரும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள், அந்த வகையில் சமீபத்தில் இவர் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலம் அடையலாம் என எண்ணி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
ஆனால் சமீபகாலமாக முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் மீது ஏதாவது ஒரு விமர்சனத்தை கூறி அசிங்கப்படுத்தி வருகிறார், சில நாட்களுக்கு முன்பு விஜய் மனைவியையும் சூர்யாவின் மனைவியையும் மிகவும் கேவலமாக கீழ்தரமாக பேசிய அசிங்கப் படுத்தி வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பல பிரபலங்களையும் கோபப்பட வைத்தது.
இந்த நிலையில் இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து அஜித் ரசிகர்களும் மீரா மிதுனை வெளுத்து வாங்கி வருகிறார்கள். ஆனால் மீராமிதுன் அனைத்தையும் அசால்டாக எடுத்துக்கொண்டு மிகவும் கூலாக இருக்கிறார்.
மேலும் மீரா மிதுன் வீடியோவிற்கு விஜயின் நண்பர் சஞ்சீவ் ட்விட்டர் மூலம் ஒரே வரியில் விஜய் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார், அவர் கூறியதாவது கெட்டதை தவிர்த்திடுங்கள் என ஒரே வரியில் கூறியுள்ளார், சஞ்சீவ் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"IGNORE NEGATIVITY"
— Sanjeev (@SanjeeveVenkat) August 5, 2020