விஜயின் நண்பர் ”மாஸ்டர்” படத்தின் ரிலீஸ் தேதியை சமுகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.!விவரம் இதோ!!

master
master

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த படம் பிகில் இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும்,வணிக ரீதியாகவும் நல்ல ஒரு சாதனை படைத்தது இப்படம் சுமார் 300 கோடி வசூல் செய்தது என படக்குழுவினர் கூறினர் இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் சமிபத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் கோரோனா வைரஸ் காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அரசு அறிவித்தது இதனைத் தொடர்ந்து எப்பொழுது டிரைலர் மற்றும் படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் அமேசான் அமேசான் வீடியோவில் வெளியாகும் என சில வதந்திகள் கிளம்பியது அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அதற்கு பதில் அள்ளித லோகேஷ் கனகராஜ் அவர்கள் அதெல்லாம் உண்மையில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 14 வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் தளபதியின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சய் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வரும் ஜூன் 22ஆம் தேதி படம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளன்று படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இது உண்மைதானா அல்லது போலி கணக்காக என தெரியவில்லை ஆனால் செய்தி வெளியாகி சிறிது நேரத்திலேயே காட்டு தீ போல சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது