275 நாட்கள் ஓடிய அந்நியன் பட சாதனையை முடியறித்த விஜய் படம்.! எது தெரியுமா.?

vijay
vijay

தமிழ் சினிமாவின் அதிக ரசிகர்கள் பட்டாளதை வைத்திருக்கும் டாப் நடிகராக விஜய் இருந்து வருகிறார் மற்றும் வசூல் மன்னனாகவும் திகழ்கிறார். விஜயின் படங்கள் வெளி வருகிறது என்றாலே அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்ப்பார்கள். அந்த படத்தின் கதை எப்படி இருக்கிறது என்பது இரண்டாம் பட்சம் ஆனால் விஜய் படத்தை பார்ப்பதற்காகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதன் மூலம் அந்த படமும் அதிக அளவு வசூலை ஈட்டி வருகின்றன. மேலும் விஜயின் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களிலும் நல்ல வசூலை பெறும். இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி திரைப்படம் விஜய் கேரியரில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

ஏனென்றால் விஜய் அதற்கு முன் காதல், செண்டிமெண்ட் போன்ற படங்களை அதிகம் கொடுத்து வந்தார் அப்படிப்பட்ட நேரத்தில் பிரபுதேவா ஒரு ஆக்சன் படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லவே விஜய் ஓகே சொல்லி நடித்து படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ஆக்சன் சீன்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும். இந்த படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மற்றும் விஜயுடன் சேர்ந்து அசின், நாசர், வடிவேலு, நெப்போலியன் போன்ற பலரும் நடித்திருந்தனர். அப்போது வெளியாகிய போக்கிரி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 275 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த திரைப்படம் 146 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது, 60 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல், 15 தியேட்டரில் 175 நாட்களுக்கு மேல் மற்றும் ஒரு தியேட்டரில் மட்டும் 275 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக தமிழை தாண்டி கேரளாவில் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அன்நியன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த படத்தின் வசூலையும் போக்கிரி திரைப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.