வாரிசு நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் தனது தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்து அந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தன்னுடைய சொந்த உழைப்பால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று சினிமாவில் வளர்ந்தவர் தான் நடிகர் விஜய்.
தற்பொழுது நடிகர் விஜய்யின் தந்தையை குறித்து இயக்குனர் ரமணா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது.திரைப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தார்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்து வந்த நிலையில் வெளியாகி கலவை விமர்சனத்தையே பெற்றது.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார்.இத்திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாக இருக்கிறது மேலும் இது குறித்த அனைத்து அறிவிப்புகளும் சமீப காலங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா வில்லியாக நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளார். இந்நிலையில் விஜய் மற்றும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பற்றிய தகவலை ஆதி பட இயக்குனர் ரமணா சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இது சோசியல் மீடியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இயக்குனர் ரமணா இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆதி திரைப்படத்தினை எஸ்.ஏ சந்திரசேகர் தயாரித்திருந்தார்.
மேலும் இத்திரைப்படத்தில் விஜய், திரிஷா,விவேக்,பிரகாஷ்ராஜ் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் ஆதி பட இயக்குனர் அவர்கள் பேட்டி ஒன்றில் ஆதி படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம் இது குறித்து தயாரிப்பாளர் சந்திரசேகரிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் அவரும் சரி என சொல்லி இருந்தார்.ஆனால் அந்த சமயத்தில் அஜித் நடித்திருந்த பரமசிவ திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்தது.
உடனே சந்திரசேகர் அவர்கள் விஜயின் படத்தை பொங்கல் அன்று வெளியிடலாம் என கூறிவிட்டு போட்டிக்காக படம் இருக்கட்டும் என கூறினார் நான் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்திருந்தேன் மேலும் படத்தின் பணிகள் பாதி அப்படியே இருந்தது இவ்வாறு சொல்லியிருந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை மேலும் அவர் சொன்ன தேதியில் நான் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னார் ஜனவரி,பிப்ரவரி,மார்ச் என மூன்று மாத பணியை டிசம்பரில் சுருக்கி செய்தேன் என்று கூறியிருந்தார்.
"ஆதி படம் முதல்ல ஏப்ரல் 14 ரிலீஸ் சொல்லிட்டு. பரமசிவன் பொங்கல் ரிலீஸ்னு சொன்னதும் அஜித் கூட கிளாஷ் விட்டா விஜய் படத்துக்கு ஹைப் ஏறும்னு விஜய், SAC வற்புறுத்தி ரிலீஸ் பண்ண வெச்சாங்க." – ஆதி டைரக்டர் ரமணா.
இப்பவும் விஜய் இந்த எச்ச வேலை பாத்துட்டே தான் இருக்கான்.#AK61 #AjithKumar pic.twitter.com/LLUWHa6wWi
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) August 8, 2022