தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருமே அண்மைக்காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்துகின்றனர். அந்த வகையில் இப்பொழுது கூட நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
அதேபோல விஜயும் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படத்தையுமே ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வைரலாகி வருகிறது.
இயக்குனர் ரமணா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார். இயக்குனர் ரமணா 2006 ஆம் ஆண்டு ஆதி என்னும் படத்தை எடுத்திருந்தார் இந்த படத்தை எஸ் ஏ சந்திரசேகர் தயாரித்திருந்தார் விஜய், திரிஷா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் குறித்து பேட்டியில் இயக்குனர் ரமணா சொன்னது : ஆதி படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்திருந்தேன் இது குறித்து தயாரிப்பாளர் சந்திரசேகரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன் அவரும் சாரி என சொல்லிவிட்டார் ஆனால் அந்த சமயம் பார்த்து அஜித் நடித்த பரமசிவன் படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்தது உடனே சந்திரசேகர் அவர்கள் விஜயின் படத்தையும் பொங்கல் அன்று வெளியிடலாம்..
ஒரு போட்டியாக படம் இருக்கட்டும் என்று கூறினார் நான் ஏப்ரல் 14 தான் படத்தை வெளியிட போறோம் என்று கொஞ்சம் வேலை பெண்டிங்கில் இருக்கு என்று சொன்னேன் உடனே அவர் நான் படத்தை விற்று விட்டேன் சொன்ன தேதியில் நான் ஒப்படைக்க வேண்டும் என்னை டென்ஷன் ஆக்காமல் வேலையை சீக்கிரமாக செய்து கொடுங்கள் என்று சொன்னார். ஜனவரி பிப்ரவரி மார்ச் 3 மாத பணியை டிசம்பரில் சுருக்கி செய்தேன் என்ற கூறினார்.