மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமா.? உண்மையை கூறிய படக்குழு.!

master
master

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். ஆழமாக சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அத்தகைய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மற்றும் வில்லி வேடத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு போன்ற மிக பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக கோலாகலமாக நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவை அனைத்தும் தடை பட்டது.

இதனையடுத்து இப்படத்தை பற்றிய ஏதேனும் ஒரு செய்தி வெளி வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு செய்தியும் வெளிவராத நிலையில் தற்போது இப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அதில் ஒன்று வில்லன் வேடம் என தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின்படி இரட்டை வேடம் இல்லை ஒரே வேடம் தான் என கூறுகின்றனர். இருப்பினும் இத்தகைய செய்தி சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.