திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் உச்ச நட்சத்திரங்கள் தன்னை மிகப்பெரிய அளவில் மீடியா உலகில் காட்டினாலும் அவரது குடும்பமும் மனைவி பிள்ளைகளை எப்பொழுதும் மீடியோ வெளிச்சத்திற்கு கொண்டு வர மாட்டார்கள் மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் அவரது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை ஒவ்வொன்றாக நோட் செய்து சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் அவர்களை ரசிகர்கள் பட்டாளம் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவர்கள் விஜய் பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிடுவது மற்றும் அவரது மகன், மகள், மனைவி ஆகியோர் என்ன செய்கிறார்கள் எங்கு லேட்டஸ்டாக போனார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர்.
சமிபத்தில் தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவிய நிலையில் தற்போது தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.
அதில் அவர் தனது சக மாணவிகளுடன் உட்கார்ந்து படம் வரையும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக உள்ளது. இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.