மாநகரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்தால் போதும் என்று இருக்கிறார்கள் அந்த அளவிற்கு தற்போது உச்சத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய நிலையில் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அதனை தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுவரும் நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து உள்ள நிலையில் இந்த படம் வெளியானவுடன் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ். அதன் பிறகு வாரிசு படத்தை பார்த்து வெளியே வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிகையாளர் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் அப்பேட் வெளியாகும் என கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் 26 ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டும் அல்லாமல் தளபதி 67 இல் நடிகர் விஜயின் கதாபாத்திரம் என்னவென்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக பிரபல பிக் பாஸ் பிரபலத்தை களமிறக்கி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த ஜனனிதான் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.