Vijay leo movie watch : விஜய் எப்பொழுதுமே வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்ப்பது வழக்கம் அந்த வகையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தும் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார். படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
இந்த படமும் வழக்கம் போல போதைப் பொருளை மையமாக வைத்து தான் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படும் ரிலீசுக்கு அவதற்கு முன்பே ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு புது புது போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது இன்று போஸ்டர் கிடையாது நாளை ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது அதனை தொடர்ந்து டிரைலர், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் வெளியிட லியோ படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
லியோ படத்தை முடித்த கையோடு விஜய் வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தற்பொழுது அவரிடம் தான் தொடர்ந்து ட்ராவல் பண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து வெங்கட் பிரபுவிடம் விஜய் பேசிய உள்ளாராம். இதனை வெங்கட் பிரபு வெளிப்படையாக கூறியுள்ளார்.
லியோ படத்தை முழுவதுமாக பார்த்த விஜய்க்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்றும் கடந்த வாரம் சென்னை சோமர்செட் கிரீன்வேஸில் லியோ படத்தின் அவுட்புட்டை பார்த்தாராம் இதனை வெங்கட் பிரபுவுடன் கூறி விஜய் மகிழ்ந்தார் என கூறப்படுகிறது.