ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதில் மிகப் பெரிய கில்லாடியாக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை நடிகர் கார்த்தி, விஜய் இப்பொழுது நடிகர் கமலை வைத்து மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படத்தை கொடுத்துள்ளார் இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக..
இருந்து உள்ளதால் தற்போது டாப் ஹீரோக்கள் பலரும் லோகேஷ் உடன் இணைய ஆசைப்படுகின்றனர். லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். தளபதி விஜய் தற்போது தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்க்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க ஒரு கேங்க்ஸ்டர் திரைப் படமாக உருவாக இருக்கிறது தளபதி விஜய் அண்மைகாலமாக வில்லத்தனமான ரோலில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி வருகிறார்.
அதனால் கேங்க்ஸ்டர் போன்ற ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது இதில் விஜயை நீங்கள்வேற மாதிரி பார்க்கலாம் என சொல்லப்படுகிறது. லோகேஷ் விஜயுடன் இணையும் போதும் படத்தின் கதையை முதலில் விஜய்காக உருவாக்க கிடையாதாம் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையை தான் தற்போது விஜய்க்கு கொடுத்து அழகு பார்க்க இருக்கிறார் லோகேஷ்.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் என்ன என்றால் பிகில் படத்தில் எப்படி விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் விரட்டி இருந்தாரோ.. அதே போல தளபதி 67 திரைப்படத்தில் அதைவிட பயங்கரமான ஒரு கதாபாத்திரத்தில் தான் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக லோகேஷ் தரப்பிலிருந்து தகவல் வருகின்றது.