நடிகர் விஜய்க்கு விக்ராந்த் மட்டுமல்லாமல் இன்னொரு தம்பியும் இருக்கிறார் என்பது பற்றி தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தின தில்ராஜ் தயாரிப்பில் உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்த வருகிறார். மேலும் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுத்தா, குஷ்பூ என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய தற்பொழுது இந்த படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் இதன் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தமிழில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இரண்டு வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தன்னுடைய 67 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு விக்ராந்த் மட்டும் தம்பி கிடையாதாம் அவருக்கு இன்னொரு தம்பியும் இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்க்கு விக்ராந்த் தம்பி என்பது பலருக்கும் தெரியும் விக்ரம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் விஜயின் சித்தியின் மகன்.
இந்நிலையில் நடிகர் விக்ராந்த் போலவே நடிகர் விஜய்க்கு இன்னொரு தம்பியும் இருக்கிறார் அதாவது அவர் வேறு யாரும் இல்லை விக்ராந்தின் சகோதரர் சஞ்சீவ் தான். இவர் விஜய்க்கு தம்பி ஆவார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் நடிப்பில் தற்பொழுது படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தை சஞ்சீவி தான் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜயின் இன்னொரு தம்பியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.