தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் கடந்த சில வருடங்களாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிவிடுகிறது கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாம்..
அதனை தொடர்ந்து விஜய் “லியோ” படத்தில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது தளபதி விஜய் ஆரம்பத்தில் இயக்குனர் பேரரசுடன் கைகோர்த்து சிவகாசி, திருப்பாச்சி என அடுத்தடுத்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்..
இந்த படத்தை தொடர்ந்து பேரரசுவின் தம்பி முத்து வடுகு, நடிகர் விஜய்க்கு ஒரு கதையை சொல்லி உள்ளார் அது ரொம்ப பிடித்துப் போவது உடனடியாக படத்தின் முதல் கட்ட பணிகள் நடந்தது. இந்த நிலையில் என்னை பிடிக்காதவர் சிலர் யாரோ விஜயிடம் தப்பு தப்பாக சொல்லி உள்ளனர்..
ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் பேரரசு உடன் பண்ணிட்டீங்க இப்போ மறுபடியும் ஏன் அவருடைய தம்பி உடன் புதிய படத்தையும் கொடுத்திருக்கீங்க தொடர்ந்து அவங்க குடும்பத்திலேயே நடிக்கிறீங்க இப்பொழுது பேரரசு இல்லாமல் விஜய் இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுறாங்க என கூறியுள்ளனர்.
இதனால் விஜய் முத்து வடுகு இயக்கத்தில் நடிக்க இருந்த முரசு திரைப்படத்தை தள்ளி வைத்துவிட்டு சிறிது காலத்திற்கு பின் துவங்கலாம் என நினைத்தாராம்.. ஆனால் காலப் போக்கில் விஜய் மாற்றப்படங்களில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் விஜய் வைத்து இயக்கும் வாய்ப்பை தான் இழந்ததாக முத்து வடுகு கூறியுள்ளார்.