தளபதி விஜய் ஒவ்வொரு படத்தையும் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்து நடித்தாலும் கூட ஒரு சில படத்தின் கதையை சற்று வீக்காக இருப்பதால் தோல்வியை தழுவுவது உண்டு. அந்த வகையில் தளபதி விஜயின் 65 வது திரைப்படமான பீஸ்ட். படத்தில விஜய் சிறப்பாக நடித்திருந்தாலும்..
படத்தின் கதையில் லாஜிக் மீறல், சொல்லு கொள்ளும்படி ஒருசில சீன்களில் சிறப்பாக இல்லாத காரணத்தினால் முதல் நாளே விமர்சனத்தையும் சந்தித்தது மேலும் வசூலும் குறைய தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல விமர்சனங்கள் கடுமையாக இருந்ததால் விஜய்யின் லெவலுக்கு வசூல் அள்ள முடியாமல் பின்தங்கி கொண்டே இருந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல படம் எங்கெல்லாம் ரிலீசானது அங்கெல்லாம் பெரும்பாலும் விமர்சனங்கள் பெரிதாக இருந்தன. அண்மை காலமாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு இது பெரும் தலைவலியாக மாறியது. விமர்சன ரீதியாக இப்படி இருந்தாலும் சைலண்டாக வசூலை மட்டும் அள்ளிக் கொண்டு தான் இருந்தது.
அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் விஜயின் கோட்டைகளாக கருதப்படும் மலையாளம், தெலுங்கு, மலேசியா, கர்நாடகா போன்ற பகுதிகளில் ஓரளவு நல்ல வேட்டை நடத்தியது. இப்படி இருக்கின்ற நிலையில் வசூலில் தமிழகத்தில் மட்டும் ஷேர் சுமார் 60 கோடியை அள்ளியது உலக அளவில் சுமார் 110 கோடியை அள்ளியது பீஸ்ட்.
படம் விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை அதற்கு இதுவே சான்றாக பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் படங்கள் எப்படி இருந்தாலும் வசூலை அள்ளி விடும் இருப்பினும் இதுபோன்ற விமர்சனங்களை அடுத்தடுத்த படத்தில் கொண்டு வராமல் இருக்க.. விஜய் அடுத்தடுத்த படத்தின் கதையின் நன்கு கேட்டு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.