நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் நெல்சன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பாக கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை சிறப்பாக எடுத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் விஜயுடன் இணைந்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் இருக்கிறது அதற்கு ஏற்றார்போல படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்துள்ளார் இந்த படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாகிறது.
இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விவிடி கணேஷ் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். படத்தில் இருந்து இதுவரை பல்வேறு அப்டேட்டுகள் வெளியான நிலையில் நேற்று ஒரு வழியாக பீஸ்ட் படத்தின் டிரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ட்ரைலரை வைத்து பார்க்கும்போது படம் ஆக்ஷன் காமெடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக விஜயின் மாஸ் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலர் இந்திய சினிமாவின் மொத்த ரெக்கார்டுகளையும் முறையடித்து வருகிறது.
அந்த வகையில் வலிமை படத்தின் ட்ரைலர் ரெக்கார்டு அனைத்தையும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஒரே நாளில் முறி அடித்து உள்ளது. இதுவரை இந்த டிரைலர் 2.1 மில்லியன் லைக்குகளையும் 21ஒரு மில்லியன் வியூவ்ஸ் பெற்றுள்ளது.