நரைத்த தாடி, கையில் துப்பாக்கி மாஸாக வெளிவந்த விஜயின் “பீஸ்ட்” பட போஸ்டர்.!

vijay

தளபதி விஜய் சமீபகாலமாக ஆக்சன் திரைப்படங்களில் செம்ம மாஸாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன்  விஜய் முதல் முறையாக கைகோர்த்து பணியாற்றியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், காமெடி, திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது இதனால் இந்த திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது விஜய் சும்மாவே மாஸ் காட்டுவார் இப்படி மூன்றும் கலந்து இருப்பதால் பீஸ்ட் படத்தில் விஜயின் நடிப்பு வேற லெவெலில் இருக்கும் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தியுள்ளனர் இந்த திரைப்படம் ஒரு வழியாக வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பாக பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது.

அந்த வகையில்  பீஸ்ட் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா  மற்றும் சில சிறந்த போஸ்டர்களை வெளியிட்டு அசத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டை  கொடுக்கப்பட ரெடியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் இது ஒரு பக்கமிருக்க இந்தத் திரைப்படத்தை எதிர்த்து கன்னட டாப் நடிகர் யாஷின் கேஜிஎப்  2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இருப்பினும் விஜய் துணிந்து களத்தில் இறங்குகிறார். தமிழ் சினிமா நடிகர்களை எதிர்த்து ஒரு கை பார்த்து வெற்றி கண்ட நிலையில் தற்போது கன்னட நடிகரை எதிர்த்து மோத உள்ளார். இந்த நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது அதில் விஜய் செம்ம ஸ்டைலாக துப்பாக்கியை வைத்துக்கொண்டு செம்ம மாஸாக இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

vijay
vijay