நடிகர் விஜய் மாஸ் கலந்த படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருவார் அதேபோல்தான் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் கதையை முதலில் சொல்லும்பொழுது காமெடி அதிகமாகவும் சற்று சண்டை காட்சிகளும் இடம் பெற்று இருந்தது ஆனால் விஜய் இதில் சில மாற்றங்களை செய்ய சொன்னார் அதன் பிறகு இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவானது படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதால் ஓரளவு டீசன்ட்டான வசூலை பார்க்க ஆரம்பித்து.
முதல் நாட்களிலிருந்து நாட்கள் போகப்போக பீஸ்ட் படத்தின் வசூல் கம்மியாக தொடங்கியது இருப்பினும் ஓரளவு நல்ல லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஏப்ரல் 14-ம் தேதி யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 2 திரைப்படம்.
மிக பிரமாண்டமாக இருந்ததால் பீஸ்ட் படத்தை ஓரம்கட்டி நல்ல வசூல் வேட்டையை நடத்தியது சொல்லப்போனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் KGF 2 படத்திற்கான வரவேற்பு அதிகரித்து இதனால் பல்வேறு திரையரங்குகளில் பீஸ்ட் படம் எடுக்கப்பட்டது.
இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் மரண அடி வாங்கியது இதுவரை உலக அளவில் ஒட்டு மொத்தமாக 215 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது விஜய் லெவலுக்கு ரொம்ப கம்மி சொல்லப்போனால் பீஸ்ட் படம் வசூலில் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.