முக்கிய மூன்று இடங்களில் மரண அடி வாங்கிய விஜயின் பீஸ்ட்.! எந்திரிக்க வாய்ப்பே இல்லையாம்.

beast-
beast-

முன்னணி நடிகர்களின் படங்களை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கியது இருப்பது  காலம் காலமாக நடக்கிறது அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் பீஸ்ட்  திரைப்படத்தையும் மக்கள் மிகப் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருந்தார்.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையாம் பீஸ்ட் படத்தில் சுவாரஸ்யம் குறைவு, லாஜிக் மீறல்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று பீஸ்ட் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரும் இந்த படத்தை பார்த்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இப்படி இருந்தாலும் படத்தின் பட்ஜெட்டை தாண்டி ஓரளவு வசூலை பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது . தற்போது நிலவும் நிலையைப் பார்த்தால் அதை எடுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் விஜய்க்கு தமிழை தாண்டி மற்ற இடத்திலும் ரசிகர்கள் நிறைய உள்ளனர்.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவற்றில் உள்ளனர். அதனால் அங்கு பீஸ்ட் திரைப்படம்  ஓடிவிடும் என கருதப்பட்டது ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் KGF 2 வெளிவந்து வெற்றி நடைகண்டு வருகிறது. மூன்று இடங்களிலும் விஜய்க்கே மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

KGF 2 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமெண்ட் கலந்து அதிரடி படமாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. கன்னடத்தையும் தாண்டி இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் நல்லதொரு வரவேற்பை பெற்று வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது. அதுவே விஜயின் பீஸ்ட் படத்திற்கு பாதகமாக அமைந்தது.