தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக தளபதி விஜயை அழைக்க காரணம் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 200 கோடி 300 கோடி வசூலை தொட்டு விடுகின்றன குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் அள்ளி விடுகிறது அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் 100 கோடி மேல் வசூலித்த 5 திரைப்படம்என்ன என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம்..
1. வாரிசு : விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பெரிய ட்ரீட்டாக அமைந்தது இந்த இப்பொழுதும் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே உலக அளவில் 300 கோடி மேல் வசூலித்து உள்ளது. தமிழகத்தில் மட்டுமே வாரிசு திரைப்படம் 147 கோடி வசூலித்து உள்ளதாம்..
2. மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படம் போதை பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதேசமயம் படத்தில் ஆக்சனுக்கு பஞ்சமே இல்லாததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 141.5 கோடி வசூல் செய்தது.
3. பிகில் : அட்லீ இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இதனால் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் வாரி குவித்தது. தமிழகத்தில் மட்டுமே 145 கோடி அசத்தியது.
4. மெர்சல் : இந்த திரைப்படத்தில் விஜய் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்தார். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதே சமயம் நல்ல மெசேஜை சொல்லி இருந்தது. தமிழகத்தில் மட்டுமே 128.3 கோடி வசூலித்தது.
5. சர்கார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் இது.. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமான ஒரு படமாக இருந்தாலும்.. படத்தில் காமெடிக்கு மற்றும் ஆக்ஷன்னுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது இந்த படம் தியேட்டரில் பட்டையை கிளப்பியது தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 128 கோடி வசூலித்தது.