நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வரும் “விஜயகாந்த்” – 19 வருடங்கள் கழித்து இணையும் டாப் நடிகர்கள்.

vijayakanth
vijayakanth

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஒரு கட்டத்தில் சிறப்பான கதைகள் கிடைத்ததன் காரணமாக  ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த சலீம், நான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் அதிரி புதிரி ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக கூட கோடியில் ஒருவன் படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன். அதிலும் குறிப்பாக மழை பிடிக்காத மனிதன் படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தை விஜய் மில்டன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் கதையை வித்தியாசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது அதேசமயம் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என கூறப்படுகிறது அந்த காரணத்தினால் இந்த படத்தில் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பிறகு 19 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த சமீப காலமாக படங்களில் நடிப்பதில்லை அரசியலில் ஈடுபட்டு உடம்பு சரியில்லாமல் இருந்தார் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ள..

விஜயகாந்த் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜயகாந்தின் கதா பாத்திரம் மிக அற்புதமாக இருக்கும் என கூறப்படுகிறது காரணமாகவே விஜயகாந்த் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.