விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – படத்தின் பெயர் என்ன தெரியுமா.?

vijayakantha-and-vijay-antony-
vijayakantha-and-vijay-antony-

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருபவர் விஜய் ஆண்டனி இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஹீரோவாக அறிமுகமானார் இவர் நடித்த முதல் படமே அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

நான் திரைப்படத்தை தொடர்ந்து சலீம், எமன் ஆகியவை நல்லதொரு வெற்றியை ருசித்தன. மேலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவது விஜய் ஆண்டனிக்கு கைவந்த கலை. ஆனால் சமீபகாலமாக விஜய் ஆண்டனியின் படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவி வந்துள்ளது அதை மீட்டெடுக்கும் வகையில் அண்மையில் இவர் கொடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது விஜய் ஆண்டனி “மழை பிடிக்காத மனிதன்” என்ற ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்து பல்வேறு டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதாக கூறப்பட்டது சரத்குமாரை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது விஜயகாந்த் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  சினிமாவையும் தாண்டி அரசியல்வாதியாகவும் தன்னை வெளி உலகிற்கு காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கும் விஜய் ஆண்டனி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குனர் ரமணா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தான் “மழை பிடிக்காத மனிதன்” திரைப்படத்தை இயக்குகிறார்.