ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் விஜயகாந்த் நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்.! அதிலிருந்து தலைவன் வேற லெவல்…

rajini-vijayakanth
rajini-vijayakanth

1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் அம்மன் கோவில் கிழக்காலே. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து ராதா நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் அந்த வருடத்தில் அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படம் கடைக் கோடி மக்கள் வரை விஜயகாந்த் அவர்களை கொண்டு சேர்த்ததில் வைதேகி காத்திருந்தாள் மற்றும் அம்மன் கோவில் கிழக்காலே ஆகிய திரைப்படங்கள்  மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல் இந்த இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன்.

ஆர் சுந்தர்ராஜன் அவர்களை தற்போது உள்ள இளைஞர்களுக்கு பலருக்கும் நகைச்சுவை நடிகராக தான் தெரியும் ஆனால் எண்பதுகளில் அவர் வெள்ளிவிழா இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. 1982 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியாகிய முதல் திரைப்படமான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் 175 நாட்களை கடந்து ஓடியது.

அதனைத் தொடர்ந்து 1984 நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது 1985 என்ற திரைப்படமும் வெள்ளி விழா கடந்தது. அதன் பிறகுதான் ரஜினிகாந்த் அவர்களை மனதில் வைத்து ஒரு கதையை எழுதினார்.

அதாவது கதாநாயகன் கிராமத்தில் எளிமையாக பாட்டு பாடுபவராக  இருக்கிறான் படித்த பணக்கார திமிர் பிடித்த நாயகி இவர்களுக்குள் ஏற்படும் மோதல் எவ்வாறு காதலாக மாறுகிறது என்பதுதான் கதை இதில் முதலில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி செய்துவந்தார் சுந்தரராஜன் அந்த நேரத்தை பூவிலங்கு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்ததால் தான் எழுதிய கதையில் முரளி மற்றும் ரேவதி நடிக்க வைக்க அட்வான்ஸ் கொடுத்தார் சுந்தர்ராஜன்.

ஆனால் முரளி கன்னட திரைப்படத்தை முடிக்க வேண்டியது இருந்ததால் அவரால் உடனடியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை அதன்பிறகுதான் விஜயகாந்த் ராதாவை வைத்து இந்த திரைப்படத்தை தொடங்கினார் அந்த திரைப்படம்தான் அம்மன் கோவில் கிழக்காலே இதற்குமுன் விஜயகாந்தை வைத்து சுந்தர்ராஜன் வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தை மாபெரும் வெற்றித் திரைப்படமாக கொடுத்ததால் விஜயகாந்த் தயக்கமில்லாமல் நடித்தார்.

படமும் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய சின்ன மணி குயிலே பாடல்கள் ரசிகர்களை திரும்பத்திரும்ப கேட்க வைத்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை முதன்முதலாக சுந்தர்ராஜன் ரஜினியை மனதில் வைத்து தான் எழுதினார் ஆனால் கடைசியாக விஜயகாந்த் நடித்து மாபெரும் ஹிட்டடித்தது.