தமிழ் சினிமாவின ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர் அதிலும் போலீஸ் கதாபாத்திரம் என்றால் சொல்லவே வேண்டாம் விஜயகாந்த் தான் நடிப்பார்.
அந்த அளவு விஜயகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சங்கப் பொறுப்புகளை ஏற்று அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கு முடிந்த அளவிற்கு உதவிகளை செய்துள்ளார் இதனைப் பல நடிகர் மற்றும் நடிகைகள் புகழ்ந்து கூறியுள்ளார்.
அதன் பிறகு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சி அளவிற்கு மடமட என வளர்ந்தார். இப்படி தன்னை உயர்த்திக் கொண்ட விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் தனது பேச்சுத் திறன் குறைந்தால் அதிக அளவு மேடைகளில் பேச முடியாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது.
தனது குரலுக்காக வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை மிகவும் மோசமாக போனது அதுமட்டுமில்லாமல் கொரோனாவும் பாதித்தது அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விஜயகாந்த் தற்போது உடல்நலம் தேறி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.
இந்த நிலையில் தனது திருமண நாளை கொண்டாடி உள்ள விஜயகாந்த் அதன் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் மிகவும் கம்பீரமாக எழுந்து நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.