” முகின் ராவ் பாடலுக்கு” குத்தாட்டம் போட்ட.. விஜய் டிவி சீரியல் நடிகைகள் – ரசிகர்களை கவர்ந்து இழுத்த வீடியோ.

serial actress
serial actress

சின்னத்திரையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப வெவ்வேறு ஆங்கிளில் யோசனை செய்து பல புதுப்புது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது விஜய் டிவி.  பல நிகழ்ச்சிகள் புதுவிதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன அதனை பார்த்து பின்பற்றியே மற்ற சேனல்களும் அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

அப்படி குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, ஸ்டார்ட் மியூசிக், பிக்பாஸ் போன்ற மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் வருடம் வருடம் விஜய் டிவியில் விஜய் டெலி அவார்ட்ஸ் என்ற விருந்து வழங்கும் விழா நடைபெறும். ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடித்து வரும் பிரபலங்களுக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என பல விருது கொடுத்து அழகு பார்த்து வந்தனர்.

அதைப் பார்த்த சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற பிரபலங்கள் பலரும் ஏங்கி வந்த நிலையில் சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் காமெடி நிகழ்ச்சிகள் நடன நிகழ்ச்சி பாடல் நிகழ்ச்சி போன்ற அனைத்திலும் சிறந்த நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி வருகின்றன.

இந்த பிரம்மாண்ட விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்காக பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த  ஆண்டுக்கான விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் சில வாரங்களாக எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் மற்ற சேனல்களில் சீரியலை வைத்த டிஆர்பியை பிடிக்கும் நிலையில்  விஜய் டிவி மட்டும் சற்று வித்தியாசமாக பல புது நிகழ்ச்சிகளை கொடுத்து.

அதன் மூலமும் டி ஆர் பி யின் உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்த நிலையில் விஜய் டெலி அவார்ட்ஸ் இன் ஷூட்டிங்கின்போது விஜய் டிவி சீரியல்களின் நடிகைகள் சிலர் “மயக்குறியே” என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.