சினிமா உலகைப் பொருத்தவரை ஒவ்வொரு அறிமுக நடிகரும் ஒரு நடிகரை ரோல் மாடலாக வைத்துக்கொண்டுதான் சினிமாவுலகில் பயணிக்க ஆசைப்படுகின்றனர் அந்த வகையில் இந்த காலகட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்று வரவேண்டும் என எண்ணியே ஒவ்வொரு நடிகரும் நடிக்கத் தொடங்குகின்றனர்.
ஆனால் நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா உலகில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த போது ரஜினி யின் மீது விருப்பம் ஆர்வம் கொண்டு அவரைப் போல் வரவேண்டும் என்பதற்காக சினிமாவுக்காக தனது பெயரையே மாற்றி அமைத்துக் கொண்டார். விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராமன் ஆனால் படத்திற்காக விஜயகாந்த் என மாற்றிக் கொண்டுள்ளார்.
விஜயகாந்த் என பெயர் வைக்க முக்கிய காரணம் ரஜினிகாந்த்தை பிடிக்கும் என்பதால் அவரைப் போலவே வரவேண்டும் என்பதற்காக அந்தப் பெயரை வைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் சினிமா உலகில் யாரை பார்த்தாலும் மரியாதை கொடுப்பது விஜயகாந்தின் வழக்கம் அதனால் ரஜினியை பார்த்தால் அதிக அளவிற்கு மரியாதை கொடுப்பாராம்.
அதேசமயம் விஜயகாந்த் இந்தப் பெயரை வைத்த பிறகு ரஜினியை போல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கடினமாக உழைத்து வெற்றியை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினியை நேரில் அழைத்து உள்ளார் அப்பொழுது ரஜினியை சந்தித்து அவரது முன் தரையில் உட்கார்ந்தார் இதனை பார்த்த ரஜினி என்ன விஜி இப்படி பண்ற எனக் கேட்டுள்ளார் அந்த அளவிற்கு ரஜினியின் மீது மரியாதை வைத்துள்ளார் விஜயகாந்த். இந்த உலகில் இவர் எவ்வளவு உயரத்தை எட்டினாலும் அந்தஸ்தை பார்க்காமல் மரியாதையைக் கொடுத்து அசத்தியுள்ளார் விஜயகாந்த்.