சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து சிறந்த இயக்குனர்களின் கதையை கேட்டு தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி வெற்றி கொடியை நாட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் 90 காலகட்டங்களில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முரட்டுக்காளை திரைப்படத்தில் நடித்து அசத்தினார் இந்த திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய ஒரு வரவேற்பை பெற்று அசத்தியது அதிலும் இந்த படத்தில் முதல் பாடலாக இடம் பெற்ற “பொதுவாக என் மனசு சங்கம்” என்ற பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை எஸ்பி முத்துராமன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ஜெய்சங்கர், ரதி, சுமலதா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய்சங்கர் ரஜினிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உண்மையில் சொல்ல போனால் முதலில் ரஜினிக்கு வில்லனாக முதலில் நடிக்க இருந்தது. கேப்டன் விஜயகாந்த் தானாம் விஜயகாந்தும் அப்பொழுதும் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் ரஜினியின் படம் அதேசமயம் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
முரட்டுக்காளை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் விஜயகாந்துக்கு ஒரு லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருந்தது. ஆனால் விஜயகாந்த் கூட இருந்த நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டாம் என கூறியுள்ளார் நீ சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்போது ஹீரோவாக தொடர்ந்து நடித்தால் நிறைய சாதிக்க முடியும் என கூறவே விஜயகாந்தும் தனது நண்பரின் கருத்தை ஏற்று நடிக்க மறுத்தார். அவரது நண்பர் ராவுத்தர் சொன்னது போல பின் சினிமாவில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து ரஜினிக்கு நிகராக அதிக ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் விஜயகாந்த்.