இப்படிப்பட்ட உடல்நிலையிலும் திரைப்படம் நடிக்கப் போகிறாரா விஜயகாந்த்..! இணையத்தில் லீக்கான உண்மை.!

vijaykanth-1
vijaykanth-1

தமிழ் சினிமாவில் சுமார் 150 திரைப்படத்திற்கு மேலாக கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் விஜயகாந்த் இவ்வாறு பிரபலமான நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதியாகவும் பெயர் எடுத்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் 2011 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த் அந்த ஆண்டில் கொடிகட்டி பறந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து கேள்வி வைப்பதன் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

ஆனால் நமது விஜயகாந்திற்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினால் அவருடைய பொறுப்புகள் அனைத்தையும் அவருடைய மனைவி பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வந்தார்.இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை படிக்காத மனிதர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாகவும் அதனை விஜய் மில்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  தற்போது மோசமான உடல்நிலை உள்ள நேரத்தில் விஜயகாந்த் எப்படி திரைப் படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அது மட்டும் இல்லாமல் கேப்டன் இல்லாத கதாபாத்திரங்கள் மட்டுமே முதலில் படமாக எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் நடிப்பார் அல்லது அவருடைய குரல் மட்டும் ஒலிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இவை அனைத்தும் அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது அதை பொருத்துதான் என பட குழுவினர் தெரிவித்துள்ளார்.