புரட்சிகலைஞர் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜயகாந்த் இவர் தான் நடிக்கும் திரைபடத்தில் நடிக்கும் சக நடிகர்கள் அனைவருக்கும் எம்ஜிஆர் போல உணவு வழங்குவதும் அவர்களுடைய நலன் கருதி நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று.
அந்த வகையில் கேப்டன் விஜயகாந்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என நடிகர் பாக்யராஜ் ஆசைப்பட்டார். அந்த வகையில் இயக்குனர் பாக்யராஜ் கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தில் மாடுபிடி வீரனாக விஜயகாந்தை நடிகர் சொன்னது மட்டுமின்றி 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பாக்யராஜ் சென்றார்.
ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் வேண்டாம் ஆகையால் ராஜேஷை போடுங்கள் தயாரிப்பாளர் சொன்னதை தொடர்ந்து விஜயகாந்திடம் இதை எப்படி சொல்வது என பாக்யராஜ் நாம் இருவரும் வேறு ஒரு திரைப்படம் பண்ணலாம் என கூறினாராம்.
பின்னர் விஜயகாந்த் பரவாயில்லை சார் என்று சொல்லிவிட்டு அட்வான்ஸாக கொடுத்த அந்த ஐநூறு ரூபாயை திரும்பி கொடுத்துவிட்டு சென்றார். அதன்பிறகு விஜயகாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வளர்ந்த பிறகும் மீண்டும் பாக்யராஜ் அவர்கள் தயக்கத்துடன் நாம் இருவரும் ஒரு திரைப்படம் பண்ணலாமா என கேட்ட நிலையில் பழைய விஷயங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சொக்கத்தங்கம் திரைப்படத்தில் நடித்து கொடுத்தார்.
பொதுவாக விஜயகாந்த் நடிக்கும் திரைப்படம் ஹிட்டாகவில்லை என்றால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய் அஜித் போன்றவர்களை படம் நஷ்டம் ஆனால் தங்களுடைய சம்பளத்தை குறைப்பது இல்லை.
அந்த வகையில் தல அஜித் சமீபத்தில் தான் திரைப்படம் வெற்றி அடையாவிட்டால் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் மற்றொரு திரைப்படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான்.