Actress vijayalakshmi exercise photo:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜயலட்சுமி. இவர் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, வெண்ணிலா வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் திருமணம் செய்துகொண்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர், தற்ப்பொழுது அவருக்கு நிலன் என்ற ஒரு மகன் உள்ளார்.
இதனைதொடர்ந்து அவர் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்தார். பிக்பாஸில் சிறந்த போட்டியாளர்களில் இவரும் ஒருவராக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் தொலைக்காட்சியில் நாயகி சீரியலில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இடையில் ஏதோ சில பிரச்சனைகளால் அதில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் டும் டும் என்ற வேறு ஒரு சீரியலில் முழுவீச்சில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் நடிகர் நடிகைகள் என பலரும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜயலட்சுமி அவர்களும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். ஒரு சிலர் என்ன வளைவு நெளிவு எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.