எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் என் கணவர்.. இப்படி ஒரு நிலைமை வரும்னு கனவுல கூட நினைக்கல.. பிரேமலதா உருக்கம்

vijayakanth
vijayakanth

Premalatha vijayakanth; என் கணவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உருக்கமாக பேசியிருக்கும் பேட்டி ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

அப்படி கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் கமலஹாசன் என பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். பிரேமலதா பெட்டியில், நான் கல்லூரியில் படிக்கும் போது உழவன் மகன் படத்தை பார்த்துவிட்டு விஜயகாந்தின் தீவிர ரசிகையாக இருந்தேன் அந்த நேரத்தில்தான் விஜயகாந்த் வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்தார்கள்.

என் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் இது. திருமணம் சொர்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதற்கு எங்களது திருமணமே ஒரு எடுத்துக்காட்டு. பெரிய நடிகர் வீட்டுக்கு பெண்பார்க்க வருகிறார் அவரை எப்படி வரவேற்பது என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருந்தபோது காலில் செருப்பு இல்லை, காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை உடன் மிகவும் எளிமையாக பெண் பார்க்க வந்தார்.

அவரின் எளிமையை பார்த்த என் அம்மா என் பெண்ணை இப்படிப்பட்ட ஒருத்தருக்கு தான் கொடுப்பேன் என்று முடிவு செய்தார். திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் எல்லாம் உறவினர்கள் சினிமாக்காரனுக்கு எப்படி பெண்ணை கொடுப்ப என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் என் தாயும் தந்தையும் எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கு என் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்றார்கள் தீர்க்கமாக இருந்து திருமணம் செய்து வைத்தார்கள்.

vijayakanth
vijayakanth

எங்களுக்கு ஜனவரியில் திருமணம் நடந்தது மார்ச் மாதம் என் முதல் பிறந்தநாள் வந்தது அதற்கு V என்ற எழுத்து போட்ட டாலரை பரிசாக கொடுத்தார். என்னிடம் எத்தனையோ நகைகள் இருக்கிறது இருந்தாலும் என் கணவர் கொடுத்த அந்த பரிசை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்து இருக்கிறேன். என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அவார்ட் தான் அந்த பரிசு.

இதனை அடுத்து மேலும் கேப்டனின் உடல்நிலை இப்படியானதும் நான் மிகவும் உடைந்து விட்டேன் ஒரு மனைவியாக நான் அவரை எப்படி எல்லாம் பார்த்து ரசித்து இருக்கிறேன் இப்படி ஒரு நிலைமை எங்கள் வாழ்க்கையில் வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை அவரது உடலில் பிரச்சனை வந்த உடனே அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், துபாய் என அனைத்து நாடுகளுக்கும் அனைத்தும் சென்று அவருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்து இருக்கிறோம்.

கேப்டனுக்கு அம்மா இல்லாததால் அவர் என்னை ஒரு அம்மாவைப் போல பார்த்தார். அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டால் தான் பிடிக்கும் என்பதற்காக இரவில் எத்தனை மணி நேரம் ஆனாலும் தூங்காமல் விழித்திருந்து அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன். இந்த ஜென்மம் மட்டும் இல்லை இனிவரும் எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும் அவர்தான் என் கணவராக வர வேண்டும் இப்படி வாழ்க்கையை எனக்கு கொடுத்த என் கணவருக்கு மிகவும் நன்றி என பிரேமலதா உருக்கமாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.