விஜயகாந்த் பயன்படுத்திய சொகுசு கார்கள்.. BMW முதல் VOLVO வரை.. இவ்வளவு பிரமாண்டமா.?

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : எம்ஜிஆரை எப்படி காலங்கள் கடந்த பிறகும் புகழ்ந்து பேசுகிறோமோ அதே போல விஜயகாந்த் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினாலும் அதை தாண்டி இல்லாதவர்களுக்கும் பல உதவிகளை செய்து அனைவருக்கும் பிடித்தவராக விஜயகாந்த் மாறி உள்ளார். அதனாலையே  பலரும் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என கூறுகிறார்.

விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் காலங்கள் கடந்த பிறகும் விஜயகாந்த் பற்றிய பேச்சுக்கள் மற்றும் குறையாது. விஜயகாந்த் உடல் இன்று மாலை 4: 45 மணி அளவில் அவரது கட்சி அலுவலகத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது தற்பொழுது பொதுமக்களின் பார்வைக்கு விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னால் உங்களை அடிக்க முடியாது.. நீங்க எவ்வளவு பெரிய இயக்குனர்.. விஜயகாந்த் அடிக்க மறுத்தது யாரை தெரியுமா..

இந்த நிலையில்  விஜயகாந்த் பற்றி நமக்குத் தெரியாத பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் விஜயகாந்திடம் இருக்கும் கார்கள் பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விஜயகாந்திடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5  இதனுடைய மதிப்பு 90 லட்சம் என கூறப்படுகிறது உயரிய விலை ஒரு கோடி இருக்குமாம். கேப்டன் பயன்படுத்தி வந்த அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல் என்றால் அது மெர்சிடிஸ் பென்ஸ் x350 சிடிஐ.

பிஎம்டபிள்யூ, ஆடி காரை தொடர்ந்து போர்டு எண்டோவர்  விஜயகாந்த் பயன்படுத்தி வருகிறார் இந்த காரை இந்தியாவில் வெகு சிலர் வைத்துள்ளனர். கேப்டன் விஜயகாந்த் கார்களில் சூப்பரான கார்  volvo எஸ் 90 இதில் பிரிமியம் அம்சங்களும், சொகுசு வசதிகளும் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கிறது இதன் மதிப்பு 68 லட்சம்.

வேட்டையன் படத்தில் ரஜினியின் கெட்டப் இது தான்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்  பிரிமியர் அம்சங்கள் கொண்ட கார்களில் ஒன்று ஆடி.. ஆடி க்யூ 7 விஜயகாந்த் வைத்திருக்கிறார் இதன் மதிப்பு 84.4 லட்சம் என கூறப்படுகிறது. இந்த கார்களை தவிர விஜயகாந்த் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா அதிக அளவில் பயன்படுத்தி இருக்கிறார். ஹூண்டாய் சான்டா FE கார் மாடலையும் கேப்டன் பயன்படுத்திய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.