திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் புதிய புதிய விஷயங்களை செய்வார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகராக மட்டுமே தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஓடியவர் சித்ரா லட்சுமணன்.
இவர் ஆரம்பத்தில் பல்வேறு படங்களை தயாரித்து இருக்கிறார் அதில் வெற்றியும் கண்டுள்ளார் அப்படி ஆரம்பத்தில் நடந்த சில சூப்பரான தகவல்களை வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார். இவர் விஜயகாந்த் உடன் கைகோர்த்து மண்வாசனை என்னும் படத்தை தயாரித்தார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தை தொடர்ந்து விஜயகாந்த் உடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து புதிய தீர்ப்பு படத்தையும் சித்ரா லக்ஷ்மணன் தயாரித்தார் இந்த படத்திற்காக நடிகர் விஜயகாந்துக்கு சுமார் 2.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டது இந்த படத்திற்கு அட்வான்ஸ்சாக சுமார் 5000 வாங்கிக் கொண்டார் இப்போது இருக்கும் நடிகர்கள் படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஃபுல் பணத்தையும் கொடுத்து விடுங்கள்.
அப்பொழுது தான் நடிப்பேன் என கூறுகின்றனர் ஆனால் விஜயகாந்த் பெருந்தன்மையாக இது போதும் என சொல்லிவிட்டார் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சித்ரா லக்ஷ்மணனுக்கு படம் வெற்றி பெறுமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது இருப்பினும் விஜயகாந்த்க்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீதி பணத்தை எடுத்துக் கொண்டு போய் உள்ளார்.
ஆனால் விஜயகாந்த் பெருந்தன்மையாக அதில் நீங்கள் ஐம்பதாயிரத்தை தர வேண்டாம் நீதியை கொடுங்கள் என கூறியுள்ளாராம். இதைப் பார்த்த சித்ரா லட்சுமணன் ஷாக்காகி இப்படி ஒரு நடிகரா தான் சொல்லாமலேயே சம்பளத்தை குறைத்துக் கொண்டார் இப்பொழுது இருக்கும் நடிகர்கள் அதற்கு எதிர் மாறாக இருப்பதாகவும் கூறினார்.