Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் நிஜ உலகில் ஏழை எளிய மக்கள் மற்றும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கும் காசு சாப்பாடு என கொடுத்து அவர்களையும் தூக்கி விட்டு உள்ளார்.
இதனாலையே பலரும் விஜயகாந்தை கேப்டன் மற்றும் கருப்பு எம்.ஜி.ஆர் என அழைத்து வந்தனர் இப்படிப்பட்ட விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு பிடித்த அஜித் படம்.? இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்
இவருடைய இறப்புக்கு பிறகும் அவரைப் பற்றி பலரும் பேசி வருகின்றனர். அப்படி இமான் அண்ணாச்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி நமக்குத் தெரியாத தகவலை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் உடன் நானும் இருந்தேன்.
அப்பொழுது விஜயகாந்த் என்னிடம் என்னால் மூணு ஆட்களை ஒரே நேரத்தில் அடிக்க முடியும் என கூறி அதிர வைத்தார். விஜயகாந்த் பக்கத்தில் ஒரு பையன் நின்றார் நான் அவர் யாரென்று கேட்டேன் நான் விஜயகாந்துடைய ஆள் என கூறினார் விஜயகாந்துடன் மூன்று நான்கு நாட்கள் அவர் கூடவே இருந்தார்.
ஒரு நாள் விஜயகாந்த் இந்த பையன் யாருன்னு தெரியுதா என கேட்டார் நான் உங்களுடைய ஆள் எனக் கூறினேன்.
உடனே அந்த பையன் கூப்பிட்டார். அவன் ஒரு 5 நிமிஷத்தில் கராத்தே செய்து காட்டினார் மொத்த யூனிட்டுமே அதிர்ந்து போனது. கம்பீரமாக இருந்த விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லாதது ரொம்ப வருத்தமாக இருக்கிறது என கூறினார்.