அந்த ஒரு இயக்குனரிடம் மட்டுமே 17 படம் பண்ணிய விஜயகாந்த்.! அதில் 90% வெற்றி..

vijayakanth
vijayakanth

80 90 கால கட்டங்களில் ரஜினி கமல்  போன்றவர்கள் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக கிராமத்திய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றி கண்டவர் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் ரஜினி கமலுக்கே டப் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடியவர்.

தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் அரசியல் போன்றவற்றிலும் தன்னை நிலை நாட்டி கொண்டு வெற்றி பெற்றார். சினிமா அரசியல் இரண்டிலும் சிறப்பாக ஓடிய விஜயகாந்த் தன்னால் முடிந்த உதவிகளையும் சினிமா துறையில் தான் என்ன சாப்பிடுகிறேனோ அதையே தான் தனது படத்தில் பணியாற்றுபவர்களும் சாப்பிட வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார்.

அதை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இல்லாதவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர்  அண்மைக்காலமாக உடம்பு சரியில்லாமல் ஓய்வு எடுத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

விஜயகாந்த் சினிமா உலகில் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார் இருப்பினும் ஒரே ஒரு இயக்குனருடன் மட்டுமே 17 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான்.  எஸ் ஏ சந்திரசேகர் சினிமா உலகில் பல நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கினாலும்..

அவருக்கு ரொம்ப ஃபேவரட் என்றால் விஜயகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் இணைந்து 17 படங்கள் பணியாற்றி உள்ளனர். இருவரும் கஷ்ட காலத்தில் மாறி மாறி தனது  படங்களின் மூலம் உதவி செய்து கொண்டனர். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.