80 90 கால கட்டங்களில் ரஜினி கமல் போன்றவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்தி கொண்டனர் ஆனால் இவர்களுக்கு ஈடு இணையாக மற்றொரு பக்கம் கேப்டன் விஜயகாந்த் கிராமத்து கதைகளை தேர்வு செய்து நடித்து வந்ததால் இவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் ரஜினி கமலை ஓவர் டேக் செய்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அசத்தினார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்துக்கு பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காததால் விஜயகாந்த் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தனது திறமையை காட்ட ரெடியாக இருந்தார்.
அந்த வகையில் 1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவான முரட்டுக்காளை திரைப்படத்தில் விஜயகாந்தை வில்லனாக நடிக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. விஜயகாந்த்தும் நடிக்க ஒப்புக்கொண்டார் இதற்காக அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் பேசியது 25 ஆயிரம் அட்வான்ஸ் எல்லாம் வாங்கி உள்ளார் விஜயகாந்த்.
இதனால் ரஜினி கமலும் இணைந்து நடிக்க போகிறார்கள் என பெரிய அளவில் பேசப்பட்டது இதை எப்படியோ அறிந்து கொண்ட விஜயகாந்தின் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த்திடம் போய் பேசி உள்ளார் அப்பொழுது அவர் சொன்னது நீ எவ்வளவு பெரிய ஹீரோ என்று உனக்கு தெரியாது உன்னை பெரிய அளவுக்கு நான் உயர்த்தி காட்டுவேன் என்று கூறி..
அந்த அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு நேராக ஏவிஎம் நிறுவனத்திடம் சென்று திருப்பி கொடுத்துவிட்டு வந்து விட்டாராம் விஜயகாந்த் நண்பர் இப்ராஹீம் ரௌதர். அவர் சொன்னது போலவே பிறகு விஜயகாந்த் ஹீரோவாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரஜினிக்கு நிகராக வலம் வந்தார்.