விஜயகாந்த் அந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் நானே பயந்து நடுங்கினேன் – நடிகை ரம்பா வெளிப்படை.!

viayakanth-
viayakanth-

80,  90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். அதிலும் குறிப்பாக இவர் கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி படங்களை கொடுத்தார். இதனால் இவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது ஒரு கட்டத்தில் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது இப்போது இவர் பெருமளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருடன் படங்களில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் இப்பொழுது விஜயகாந்த் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தனது திறமையையும் கிளாமரையும் காட்டி ரசிகர்களை அலறவிட்ட தொடை அழகி ரம்பா  தற்பொழுது விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார்.

ரம்பாவும் விஜயகாந்தும் இணைந்து  தர்மசக்கரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரம்பா கூறியது. விஜயகாந்த் சார் மனதில் பட்டதை நேராக பேசக்கூடியவர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். தர்மசக்கரம் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடத்தப்பட்டது அங்கு கூட்டம்.

அதிகமாக இருப்பதால் பாடல் காட்சி எடுக்க நாங்கள் காலையில் போக வேண்டும் ஒரு தடவை என்னை விஜயகாந்த் சார் நீ எத்தனை மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாய் என கேட்டார் . நான் 7 மணிக்கு சொன்னேன் ஆனால் நான் 4. 30 மணிக்கு அங்கு இருப்பேன் என கூறினார்.

அவர் சொன்னது போலவே ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்று விடியற்காலை 4:30 மணிக்கு இருந்தார் அந்த விஷயத்தில் அவர் ரொம்ப ஸ்ட்ரிட் சொன்ன நேரத்தில் பர்பெக்ட்டாக இருப்பார். அவருடன் நடிப்பது எனக்கு ரொம்ப பயமாக இருக்கும் அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார் என தெரிவித்தார்.