ரஜினிக்கு முன்பே விஜயகாந்த் தான் சூப்பர் ஸ்டார்.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்

Rajini
Rajini

ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக வலம் வந்தவர் ரஜினி மற்றும் கமல்.. அவர்களுக்கு போட்டியாக விஜயகாந்த், மோகன், ராமராஜன், கார்த்தி போன்ற நடிகர்களும் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்தனர் குறிப்பாக 80களில் விஜயகாந்த் அதிக படங்கள் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருந்தார்.

ரஜினி, கமல் முன்னணி நடிகர் என்பதால் சிறந்த இயக்குனர்கள் பலரும் அவரை  அவருக்காக காத்துக் கொண்டிருந்தனர் ஆனால் விஜயகாந்த் இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து ஓடிக்கொண்டே இருந்தார்.

விடாமுயற்சி : 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் அஜித்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அப்படி விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள் என சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் பிளாக் பூஸ்டர் ஹிட் அடித்த படம் என்றால் பூந்தோட்ட காவல்காரன், ஊமை விழி திரைப்படம் தான்.  மறுபக்கம் ரஜினி நடித்த நான் அடிமை இல்லை, மாவீரன்,  விடுதலைப் போன்ற படங்கள் சுமாராக ஓடின “மிஸ்டர் பாரத்” படம் பெயரை வாங்கித் தந்தது ஆனால் விஜயகாந்த் நடித்த படங்கள் அளவுக்கு ரஜினி படம் ஓடவில்லை.

பொதுவாக டாப் நடிகர்களின் 50-வது மற்றும் நூறாவது படங்கள் பெருமளவு தோல்விய படங்களாக தான் இருந்து அந்த வகையில் ரஜினி கமல் பிரபு சத்யராஜ் போன்ற நடிகர் 100வது படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. விஜயகாந்தின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடியது மட்டும் அல்லாமல் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கண்டது. இந்த சமயத்தில் மார்க்கெட் உச்சியில் இருந்த விஜயகாந்தை பார்த்து பலரும் சூப்பர் ஸ்டார் என எழுத தொடங்கினர்.

விடாமுயற்சி பிரபலம் மாரடைப்பால் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்

சில சிறப்பு கட்டுரைகளில் கூட விஜயகாந்தை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு வந்தனர். இப்படி ஓடிக்கொண்டிருந்த விஜயகாந்த் 90களில் சின்ன கவுண்டர், மாநகர காவல், என வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் 11ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக அரசியலில் அசத்தினார்.

இப்போ உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். ரஜினி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்த அந்த வகையில் அண்ணாமலை, தளபதி, பாட்ஷா, முத்து, படையப்பா என அனைத்து படங்களும் பெயரை வாங்கித் தந்தன மேலும் பாக்ஸ் ஆபிஸில்  மன்னனாக அவர் வலம் வந்தார் அதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது.