Vijayakanth vs Ramarajan : 80, 90 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராமராஜன். இவர்கள் இருவரும் இதுவரை நேருக்கு நேர் 25 முறை மோதி உள்ளனர். அதில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
1986 ஆம் ஆண்டு ராமராஜனின் நம்ம ஊரு நல்ல ஊரு, விஜயகாந்தின் தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் ஆகிய படங்கள் மோதின. இதில் மூன்று படங்களுமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இருந்தது.
1987 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் விஜயகாந்த்தின் வீரபாண்டியன் ஆகிய படங்கள் மோதின இதில் இரண்டு படங்களும் வெற்றி பெற்று இருந்தாலும் ஒரு படி மேல் ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் இருந்தது.
1987 ஆம் ஆண்டு விஜயகாந்தின் நினைவே ஒரு சங்கீதம் ராமராஜனின் ஒன்று எங்கள் ஜாதியே, இவர்கள் இந்தியர்கள் படம் வெளியானது இதில் விஜயகாந்தின் படம் ஹிட் அடித்தது.
ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நடித்த சிறுவன் மரணம்.. கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் ஆசை
1988 பொங்கல் தினத்தை முன்னிட்டு ராமராஜன் நடித்த செண்பகமே செண்பகமே, விஜயகாந்த் மாலையும் நீயே காலையும் நீயே, மக்கள் ஆணையிட்டால் ஆகிய படங்கள் வெளியாகி இதில் செண்பகமே செண்பகமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
1988 மார்ச்சில் ராமராஜன் நடித்த ராசாவே உன்னை நம்பி விஜயகாந்த் நடித்த தெற்கத்தி கள்ளன், உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆகிய படங்கள் வெளியாகின இதில் ராமராஜன் நடித்த ராசாவே உன்னை நம்பி சூப்பர் ஹிட் அடித்தது விஜயகாந்த்தின் தெற்கத்திக் கள்ளன் ஒரு படி மேலே போய் நின்றது.
1988 ஜூனில் விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் ராமராஜன் நடித்த பார்த்தால் பசு ஆகிய இரு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின. விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் வெள்ளி விழா கண்டு வெற்றி பெற்றது. 1988 ஆகஸ்டில் விஜயகாந்த் நடித்த நல்லவன், ராமராஜனின் எங்க ஊரு காவல்காரன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இரண்டு படங்களுமே ஹிட் அடித்தது.
1988 தீபாவளியை முன்னிட்டு ராமராஜன் நடித்த நம்ம ஊரு நாயகன், விஜயகாந்தின் உழைத்து வாழ வேண்டும் ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி இந்த இரண்டு படங்களுமே சுமாராக தான் ஓடியது.
1989 ஆம் ஆண்டு ஜனவரியில் ராமராஜனின் என்ன பெத்த ராசா, விஜயகாந்தின் என் புருஷன் எனக்கு மட்டும் தான் ஆகிய படங்கள் வெளியாகின இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றாலும் மக்கள் மனதில் அதிகம் பேசப்பட்டது என் புருஷன் எனக்கு மட்டும் தான்..
1989 விஜயகாந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன், ராமராஜன் நடித்த எங்க ஊரு மாப்பிள்ளை இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதியதில் விஜயகாந்த் படம் டாப்.. 1989 ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன், விஜயகாந்தின் பொறுத்தது போதும் படமும் வெளியானது இதில் கரகாட்டக்காரன் படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி பெரிய வெற்றியை பதிவு செய்தது.
1989 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு விஜயகாந்தின் ராஜ நடை, தர்மம் வெல்லும், ராமராஜனின் தங்கமான ராசா, அன்பு கட்டளை ஆகிய படங்கள் வெளியாகின இதில் விஜயகாந்தின் இரண்டு படங்களும் ஹிட் அடித்தது ராமராஜனுக்கு தங்கமான ராசா படம் சூப்பராக ஓடியது.
1989 டிசம்பரில் ராமராஜனின் மனசுக்கேத்த ராஜா, விஜயகாந்தின் மீனாட்சி திருவிளையாடல் ஆகிய படங்கள் மோதின இதில் ராமராஜன் வின்னர்.. 1990 ஜனவரியில் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, ராமராஜனின் பாட்டுக்கு நான் அடிமை ஆகிய படங்கள் வெளியாகின இதில் விஜயகாந்த் வின்னர்.
1990 ல் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விஜயகாந்தின் புது பாடகன், ராமராஜனின் தங்கத்தின் தங்கமாகிய படங்கள் வெளியாகின இதில் விஜயகாந்த் வெற்றி. 1990 ஜூலையில் ராமராஜன் நடித்த ஊரு விட்டு ஊரு வந்து, விஜயகாந்தின் சிறையில் பூத்த சின்ன மலர் படம் வெளியானது இதில் இரண்டு படங்களுமே வெற்றி..
1990 தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்தின் சத்ரியன், ராமராஜனின் புது பாட்டு ஆகிய படங்கள் வெளியாகின இதில் சத்ரியன் படம் அதிரி புபுரி ஹிட் அடித்தது. 1991ல் ராமராஜன் நடித்த அண்ணன் காட்டிய வழி, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன். இந்த மோதலில் கேப்டன் பிரபாகரன் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
1991 தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ராமராஜனின் நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஆகிய படங்கள் வெளியாகின இதில் ராமராஜன் படம் பிளாப்.
1992 அக்டோபரில் விஜயகாந்தின் காவியத்தலைவன் படமும், ராமராஜனின் வில்லுப்பாட்டுக்காரன் படமும் ரிலீஸ் ஆனது இதில் ராமராஜன் படம் டாப்.. 1995 விஜயகாந்தின் காந்தி பிறந்த மண், ராமராஜனுக்கு தேடி வந்த ராசா படமும் வெளியானது இதில் விஜயகாந்த் வின்னர்..
1996 விஜயகாந்தின் தாயகம், ராமராஜனின் அம்மன் கோயில் வாசலிலே படங்கள் மோதின இதில் விஜயகாந்த் வெற்றி.. 1997 விஜயகாந்தின் தர்மசக்கரம் படமும் ராமராஜனின் கோபுர தீபம் படமும் மோதியது இதில் இரண்டு படமுமே பிளாப்..
1999 விஜயகாந்தின் பெரியண்ணா ராமராஜனின் பூ, அண்ணன் ஆகிய படங்கள் மோதின இதில் விஜயகாந்தின் பெரியண்ணா பெரிய வெற்றியை பதிவு செய்தது. 2001 தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்தின் தவசி, ராமராஜனின் பொன்னான நேரம் படம் வெளியானது இதில் தவசி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.