Vijayakanth VS Prabhu : 33 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?

Vijayakanth
Vijayakanth

Vijayakanth VS Prabhu : சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என போட்டி போட்டுக் கொண்டே வருகிறார்கள். அப்படி விஜயகாந்துடன் ராமராஜன், நவரச நாயகன் கார்த்தி, ரஜினி, கமல் போன்றவர்கள் போட்டி போட்டு உள்ளனர் அதேபோல விஜயகாந்துடன் நடிகர் பிரபுவும் 33 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர் இதில் யார் கை ஓங்கி உள்ளது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நல்ல நாள் –  கைராசிக்காரன் : 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் தியாகராஜன், நளினி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நல்ல நாள் படமும், பிரபுவின் கைராசிக்காரன் படமும் ஒன்றாக வெளியானது.  இதில் நல்ல நாள் படம் சூப்பராக ஓடியது.

தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

வைதேகி காத்திருந்தாள் – வம்ச விளக்கு : 1984 ஆம் ஆண்டு  பிரபுவுக்கு வம்ச விளக்கு படமும், விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படமும் நேருக்கு நேர் மோதியது இதில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ராமன் ஸ்ரீராமன் – நீதியின் நிழல் : 1985 ஆம் ஆண்டு இந்த இரண்டு படங்கள் வெளியானது இந்த இரண்டு படங்களுமே சுமாராகத்தான் ஓடியது.

விஜய் சேதுபதி சட்டை பட்டன், செருப்பு பிச்சிகிச்சு.. கோவை சரளா, அபிராமி மாட்டிகிட்டாங்க – மன்சூர் அலிகான்

புதிய சகாப்தம் –  நேர்மை : 1985 ஆம் ஆண்டு விஜயகாந்தின் புதிய சகாப்தம் படமும், பிரபுவின் நேர்மை திரைப்படம் முன் வெளியானது இதில் புதிய சகாப்தம் படம் வெற்றி பெற்றது.

கரிமேடு கருவாயன் – சாதனை : 1986 ஆம் ஆண்டு விஜயகாந்தின் கரிமேடு கருவாயன் படமும், பிரபுவின் சாதனை படமும் வெளியானது இதில் கருமேடு கருவாயன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

தழுவாத கைகள், தர்ம தேவதை  – பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள் :  இந்த நான்கு படங்களும் 1986 ஆம் ஆண்டு வெளியானது இந்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றது.

வேலுண்டு வினையில்லை – மேகம் காத்திருக்கு : 1987 ஆம் ஆண்டு விஜயகாந்தின் வேலுண்டு வினையில்லை படமும், பிரபுவின் மேகம் கருத்திருக்கு படமும் வெளியானது. இரண்டுமே சுமாரான வெற்றியை பார்த்தது.

வீரபாண்டியன் – சின்ன பூவே மெல்ல பேசு : 1987 ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வீரபாண்டியன் திரைப்படமும், பிரபுவின் சின்ன பூவே மெல்ல பேசப்படமும் நேருக்கு நேர் மோதியது இதில் பிரபுவின் படம் ஹிட் அடித்தது.

சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன் –  இவர்கள் வருங்காலத்து தூண்கள் : இந்த மோதலில் விஜயகாந்தின் சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன்  படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் – குரு சிஷ்யன், அக்னி நட்சத்திரம் : விஜயகாந்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம் பிரபுவின் குரு சிஷ்யன் அக்னி நட்சத்திரம் படங்கள் நேருக்கு நேர் மோதியது இதில் பிரபுவின் இரண்டு படங்களும் வெள்ளி விழா கண்டது.

தம்பி தங்க கம்பி –  என் தங்கச்சி படிச்சவ : 1988 ஆம் ஆண்டு இந்த இரண்டு படங்களுமே வெளியான வெற்றி படங்களாக அமைந்தது.

தர்மத்தின் தலைவன் – செந்தூரப்பூவே  :  1988 ஆம் ஆண்டு ரஜினி பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் படமும், விஜயகாந்தின் செந்தூரப்பூவே படமும் வெளியானது இந்த இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது.

உழைத்து வாழ வேண்டும் – கலியுகம் பூவிழி ராஜா : 1988 ஆம் ஆண்டு  விஜயகாந்தின் உழைத்து வாழ வேண்டும் படமும், பிரபுவின் கலியுகம், பூவிழி ராஜா ஆகிய படங்களும் மோதின இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

தர்மம் வெல்லும், ராஜநடை –  வெற்றி விழா : 1989 ஆம் ஆண்டு இந்த மூன்று படங்களும் மோதின. இதில் இந்த மூன்று படங்களுமே மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு வெற்றி படங்களாக மாறியது.

மீனாட்சி திருவிளையாடல் – வெற்றி மேல் வெற்றி : 1989 ஆம் ஆண்டு விஜயகாந்தின் மீனாட்சி திருவிளையாடல் படமும் பிரபுவின் வெற்றி மேல் வெற்றி படமும், வெளியானது. இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

புலன்விசாரணை – காவலுக்கு கெட்டிக்காரன், நல்ல நேரம் பொறந்தாச்சு :   1991 ஆம் ஆண்டு விஜயகாந்தின்  புலன்விசாரணை மற்றும் பிரபுவின் இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதியது இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

கேப்டன் பிரபாகரன் – சின்னத்தம்பி : 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து சாதனை படைத்தது.

மாநகர காவல் –  ஆயுள் கைதி : விஜயகாந்தின் மாநகர காவல், பிரபுவின் ஆயுள் கைதி படமும் நேருக்கு நேர் மோதியது இதில் விஜயகாந்தின் மாநகர காவல் வெற்றி பெற்றது.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் –  தாலாட்டு கேக்குதம்மா : விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படமும் பிரபுவின் தாலாட்டு கேக்குதம்மா படமும் மோதியது இதில்  இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது.

சின்ன கவுண்டர் – பாண்டிதுரை : விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படமும், பிரபுவின் பாண்டிதுரை திரைப்படமும் வெளியானது இதில் பாண்டித்துரை படம் சுமாராக ஓடியது. சின்ன கவுண்டர் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

காவிய தலைவன் – செந்தமிழ் பாட்டு : விஜயகாந்தின் காவிய தலைவன், பிரபுவின் செந்தமிழ் பாட்டு வெளியானது இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

கோயில் காளை –  சின்ன மாப்பிள்ளை : 1992 இல் வெளியான இந்த இரண்டு படங்களுமே சுமாராக ஓடியது.

எங்க முதலாளி –  உழவன் : இந்த இரண்டு படங்களும் 1993ஆம் ஆண்டு வெளியானது இந்த படங்களும் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக ஓடவில்லை.

சேதுபதி ஐபிஎஸ் –  ராஜகுமாரன் : பிரபுவின் ராஜகுமாரன் விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் இந்த இரண்டு படங்களில் விஜயகாந்த் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

பெரிய மருது –  ஜல்லிக்கட்டு காளை : 1994 ஆம் ஆண்டு விஜயா காந்தியின் பெரிய மருது படமும், ஜல்லிக்கட்டு காளை படமும் வெளியானது இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

விஜயகாந்தின் கருப்பு நிலா கட்டுமரக்காரன் 1995-ல் வெளியானது இதில் கட்டுமரக்காரன் படம்  மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

விஜயகாந்தின் திருமூர்த்தி பிரபுவின் சின்ன வாத்தியார் படம் 1995இல் வெளியானது இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் சுமாராகவே ஓடியது.

தாயகம் –  பரம்பரை : 1996 இல் வெளியான இந்த இரண்டு படங்களும் வெளியானது இதில் விஜயகாந்த் படம் சுமாராக ஓடியது பிரபு படம் வெற்றி படமாக மாறியது.

1996 ஆம் ஆண்டு  விஜயகாந்தின் அலெக்சாண்டர் பிரபுவின் பாஞ்சாலங்குறிச்சி படம் வெளியானது இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

1997 ஆம் ஆண்டு  பிரபுவின் பெரிய தம்பி விஜயகாந்தின் தர்மசக்கரம் வெளியானது இதில் இரண்டு படங்களும் வெற்றி பெற்றது.

1998 விஜயகாந்தின் உளவுத்துறை பிரபுவின் பொன் மனம் வெளியானது இதில் விஜயகாந்த் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

1998 ஆம் ஆண்டு விஜயகாந்தின்  வீர விளைஞ்ச மண்ணு பிரபுவின் என் உயிர் நீதானே படமும் வெளியானது இதில் வீரம் வெளஞ்ச மண்ணு படம் வெற்றி பெற்றது.

வானத்தைப்போல –  திருநெல்வேலி : 2000 ஆண்டு பிரபுவின் திருநெல்வேலி படமும், விஜயகாந்தின் வானத்தைப் போல படம் வெளியானது இந்த ரேசில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.