80, 90 களில் கொடி கட்டி பறந்தவர் ராமராஜன். அரைகால் டவுசரை போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த ஒரே ஹீரோ ராமராஜன். இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்துமே கிராமத்து கதைகள் உள்ள படங்கள் தான் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஒரு கட்டத்தில் ரஜினி கமலுக்கு இணையாக ராமராஜன் பெயர் பேசப்பட்டது மட்டுமல்லாமல் ராமராஜன் படங்களும் வசூலை வாரின. இதனால் ராமராஜனை வைத்து படம் பண்ண பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்துக் கிடந்தனர் ஆனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை அள்ளினார்.
ஒரு கட்டத்தில் இவருடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்ததால் திடீரென அரசியல் பக்கம் தன்னை தலைகாட்டிக்கொண்டார். இருந்தாலும் ஒன்னு, ரெண்டு கதைகள் இவரை தேடி வந்தன ஆனால் நடித்த ஹீரோவாக தான் நடிப்பேன் என நேரடியாக கூறியதால் அந்த வாய்ப்பும் பறிபோகின.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்பொழுது தான் சாமானியன் மற்றும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார் இந்த நிலையில் ராமராஜனை பற்றி பிரபல நடிகர் தியாகு பேசியுள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்.. ராமராஜன் மீது எனக்கு கோபம் இருக்கிறது. விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான வானத்தைப்போல திரைப்படத்தில் ராமராஜனை நடிக்க வைக்க விஜயகாந்த் ஆசைப்பட்டார்.
ராமராஜனிடம் பேச என்னை அனுப்பினார். நான் ராமராஜனிடம் வானத்தைப்போல படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கிறது என கூறினேன் ஆனால் அவரோ நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பின் என கூறி மறுத்துவிட்டார் உண்மையில் வானத்தைப்போல படத்தில் அவருக்கு ஒரு சிறப்பான கதாபாத்திரம் அதை அவர் தவற விட்டார் என கூறினார்.